dinamalar telegram
Advertisement

டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகைகளில் தனியார் விளம்பரங்கள் இடம்பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கவனத்துக்கு போனது. இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகைகளில் தனியார் விளம்பரம் எக்காரணம் கொண்டும் இடம் பெறக்கூடாது. இது, பொதுமக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்கிவிட்டு புதிய பெயர் பலகை வைக்க வேண்டும். பெயர் பலகையில் போலீஸ் துறையின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement