dinamalar telegram
Advertisement

பழைய இரும்பில் உருவான மோடி சிலை

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். மகன் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து சூர்யா சிற்பக்கலை கூடம் நடத்தி வருகிறார். பல தலைவர்களின் சிலையை தத்ரூபமாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். 75 ஆயிரம் போல்ட் நெட்டுகளை பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை செய்தனர். இதைப் பார்த்த பெங்களூரு கவுன்சிலர் மோகன் ராஜு, பிரதமர் மோடியின் சிலையை இதேபோல தயார் செய்து தரும்படி கேட்டார். இதையடுத்து, வெங்கடேஸ்வர ராவும், அவர் மகன் ரவிச்சந்திரனும் மெக்கானிக் ெஷட்டுகளில் பயன்படாமல் கிடக்கும் போல்ட், நெட், ராடுகள், கார், பைக்கின் வீல்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி வந்து மோடி சிலையை தயாரித்துள்ளனர். 14 அடி உயரம், 2 டன் எடை கொண்ட அந்தச் சிலையை உருவாக்க கிட்டத்தட்ட 2 மாதம் ஆனதாக வெங்கடேஸ்வர ராவ் கூறினார். சிலை தயாரிப்புப் பணியில் தந்தை, மகனுக்கு உதவியாக, 10 பேர் இருந்துள்ளனர். பெங்களூருவுக்கு 16ம்தேதி சிலை கொண்டு செல்லப்படவுள்ளது. அங்குள்ள பூங்காவில் மோடி சிலையை நிர்மாணிக்க உள்ளதாக கவுன்சிலர் மோகன் ராஜு தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
ganesha
ganesha - tamilnadu,இந்தியா . 15-செப்-2021 13:23 IST

இரும்பு மனிதர் என்பது சரி

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 15-செப்-2021 08:52 IST

கட்டுமரம் தான் இப்பிடி உயிரோட இருக்கும்போதே சிலை செஞ்சுக்கிட்டதா கேள்விப் பட்டிருக்கேன்.

Reply
மதுரை விருமாண்டி
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா . 15-செப்-2021 06:44 IST

எடைக்கு போட்டிருந்தா அட் லீஸ்ட் பேரீச்சம் பழமாவது கெடைச்சிருக்கும். வேஸ்ட் பண்ணிட்டாங்க.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement