dinamalar telegram
Advertisement

இலவச பயண இழப்பை ஈடுகட்ட வழி கண்டது தமிழக அரசு

திமுக அரசு புண்ணியத்தில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு வருமானம் சரிந்து விட்டது. இழப்பை சரிக்கட்ட பல வகையில் முயற்சி செய்கிறது அரசு. ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது அதில் ஒரு வகை. இது பற்றி புகார்கள் வந்தாலும் அரசு மறுக்கிறது. குறைந்தபட்ச டிக்கட் 5 ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் ஒரு ரூபாய் அதிகம். ஸ்டேஜ் என்பது 2 கிலோ மீட்டர் தூரம். இலவச பயணம் அமலுக்கு வந்த பிறகு, ஸ்டேஜ் தூரத்தை பாதியாக குறைத்து விட்டார்கள். . அதாவது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ரூபாய் கூடுகிறது. அதோடு விடவில்லை. ஐந்து ரூபாய்க்கு பிறகு 6 ரூபாய் 7 ரூபாய் டிக்கெட் எல்லாம் கொடுப்பது இல்லை. நேராக 10 ரூபாய்க்கு போய்விடுகிறார் கண்டக்டர். இது 66 சதவீத உயர்வு. கிட்டத்தட்ட பெண்களுக்கு சேர்த்து ஆண்கள் கட்டணம் செலுத்தும் நிலை. சத்தம் இல்லாமல் நடக்கிறது இந்த வசூல். சென்னையின் புறநகர்களில் டவுன் பஸ்களை இயக்கும் பொறுப்பு விழுப்புரம் போக்குவரத்து கழகத்திடம் தரப்பட்டுள்ளது. அதன் அதிகாரிகளிடம் செய்தியாளர் விசாரித்தபோது எவரும் பதில் சொல்லவில்லை. ”சென்னைவாசிகள் ஒரு ரூபாய் 2 ரூபாய்க்கு எல்லாம் அலட்டிக் கொள்வது இல்லை. சில்லரை தேடி எடுத்து கொடுப்பதும் கஷ்டம். யாருக்கும் சிரமம் வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் அரசு செய்வதை குறை சொல்லலாமா?” என ஒருவர் கேட்டார். அவர் அதிகாரியா பயணியா என்று தெரியவில்லை. ரொம்ம்ப நல்லவர் என்பது மட்டும் தெரிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (8)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)
Krishna Nidhi
Krishna Nidhi - . 15-செப்-2021 07:38 IST

0..........

Reply
Narayanan
Narayanan - chennai,இந்தியா . 15-செப்-2021 06:32 IST

இந்த அடாவடி அரசின் கொள்கையே இப்படித்தான் மக்களை ஏமாற்றி பிழைப்பது . பால்விலையை குறைத்து நீலநிற கவரில் வரும்பாலையே பச்சைநிற கவரில் போட்டு காசை பார்க்கிறார்கள் நரிப்பயல்கள்

Reply
 rajan
rajan - . 14-செப்-2021 22:08 IST

மீனம்பாக்கம் To கூடுவாஞ்சேரிக்கு 31 போய்.எல்லாமே டீலக்ஸ் RED Bus கள்தான் வருகிறது. சாதா பேருந்து கிடையாதாம். ரயிலில் பத்து ரூபாய்தான் செங்கல்பட் வரை. ஆனால், லைன் பிளாக் என்று பகல் நேரங்களில் ரயில் சர்வீஸ் கிடையாது. அப்படியே வந்தாலும் ஒரு மணிக்கு ஒரு ரயில் மட்டுமே. என்னத்த சொல்றது.

Reply
Ram
Ram - ottawa,கனடா . 14-செப்-2021 21:32 IST

விடியல் அரசு சுரண்டல் அரசாகிவிட்டதே ….

Reply
குமார்
குமார் - . 14-செப்-2021 19:35 IST

ஒருத்தர் சுமையை மற்றவர் தலையில் வைப்பது புத்திசாலி தனமாகாது இதுவும் ஒரு ஏமாற்று வேலை அதைத்தான் இந்த அரசு செய்கிறது

Reply
Parthasarathy Badrinarayanan
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா . 14-செப்-2021 19:34 IST

திமுக ஆட்சியின் கொள்ளை

Reply
Varathappan Parthasarathy
Varathappan Parthasarathy - Karur,இந்தியா . 14-செப்-2021 18:20 IST

பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் சர்வீஸ் வரவேற்பு குரியது

Reply
S SRINIVASAN
S SRINIVASAN - . 14-செப்-2021 17:58 IST

who asked you not to give tickets to women now you silently increase the the bus fare which is unethical unpardonable not justifiable useless government and useless officials initiating this kind of vari vasool. why you tell lie to get vote now you are managing and giving free travelling useless government

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement