dinamalar telegram
Advertisement

வாணியம்பாடி கொலையில் நடவடிக்கை என்ன முதல்வர் விளக்கம்

வாணியம்பாடி, ஜீவா நகரில், இம்தியாஸ் என்பவரின் குடோனில் இருந்து 9 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றை கடந்த ஜூனில் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் காட்டி கொடுத்ததாக வசீம் அக்ரம் என்பவர் கடந்த 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி எதிர்கட்சி தலைவர் பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். இதுபோன்ற சம்பவங்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Ganesh
Ganesh - . 14-செப்-2021 11:58 IST

எங்க பார்த்தாலும் கொலை தற்கொலை. என்ன செய்கிறது நீதி மன்றங்கள். எங்கே விடியல்? இறந்த பின் அரசியல் செய்து என்ன பயன் ஏன் சமூக நீதி கன்னுக்கெதிரே நடக்கும் கொலையை தடுக்க முடியவில்லை? எத்தனை கட்சி எத்தனையோ தலைவர்கள் ஏன் சமுதாயத்தை தவறான பாதையில் எடுத்து செல்கிறார்கள்?

Reply
பேசும் தமிழன்
பேசும் தமிழன் - . 14-செப்-2021 06:53 IST

தமிழகத்தில் எத்தனையோ கொலை கொள்ளை சம்பவங்கள் தமிழ் நாட்டில் நடக்கும் போது... வாணியம்பாடி சம்பவத்துக்கு மட்டும் ஸ்பெஷல் கவனம் எதற்கு... இதே அக்கறை கும்பகோணம் கொலை சம்பவத்துக்கு காட்டாதது ஏன்??

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement