dinamalar telegram
Advertisement

சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில், வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை நடத்தப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 8.30க்கு நடை அடைக்கப்படும். 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோயில் திறந்திருக்கும். கோவிட் பரவல் காரணமாக, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். கோவிட் நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவரவேண்டியது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement