dinamalar telegram
Advertisement

இலங்கையில் அவசர நிலை! உணவு பஞ்சம் ஏற்பட காரணம்? | Sri lanka food emergency

இலங்கையில் உள்ள அத்யாவசிய கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர். 3 கிலோ சர்க்கரை வாங்க சென்றவருக்கு அரை கிலோ சர்க்கரை தான் தரப்படுகிறது . ஒரு குடோனில் பதுக்கப்பட்ட 32 ஆயிரம் டன் சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது . மக்களுக்கு சம்பளத்தை விட செலவு தான் அதிகம் ஆகிறது . அரிசி, உருளை கிழங்கு உள்ளிட்ட உணவு பொருட்கள் ,மருந்து , எரிபொருள் , விவசாயத்துக்கு தேவையான உரம் போன்றவற்றின் விலை கிடுகிடுவென எகிறியுள்ளது . இலங்கையில் ஏன் இந்த நிலைமை ? கோவிட் காரணமாக இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பலர் வேலை இழந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் தான் இலங்கைக்கு சென்றுள்ளனர் . அரசின் வருமானம் பெரும்பாலும் சுற்றுலாவை நம்பி இருப்பதால் இப்போது நிதி பற்றாக்குறை ஏற்றப்படுள்ளது . வேறு காரணங்களும் இருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
vns
vns - Delhi,யூ.எஸ்.ஏ . 07-செப்-2021 21:09 IST

தமிழக அமைச்சர்களின் தலைவர் மற்றும் அவரது குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் சீமான் வைகோ போன்றோர் தங்கள் ஒரு மாத வருவாயை இலங்கை தமிழர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும். செய்வார்களா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement