dinamalar telegram
Advertisement

ரூ.38 கோடி வாடகை பாக்கி ஊட்டியில் 1400 கடைக்கு சீல்

போலீசுடன் வந்து அதிகாரிகள் அதிரடி ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் நகரின் மையத்தில் செயல்படுகிறது. 1,600 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 2016ல் கடைகளின் வாடகையை நகராட்சி உயர்த்தியது. அதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான வியாபாரிகள் நான்கு ஆண்டுகளாக வடகை செலுத்தாமல் உள்ளனர். மொத்தம் 38 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். வாடகை பாக்கியை வியாபாரிகள் ஒரே தவணையாக செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி எச்சரித்தது. மூன்று தவணையாக செலுத்த வியாபாரிகள் அவகாசம் கேட்டனர். அதை நிராகரித்த நகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் 1385 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement