Load Image
dinamalar telegram
Advertisement

முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு மத்திய இணை அமைச்சர் கைது!

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் நாராயண் ரானே. சிறுகுறு தொழில்கள் மத்திய இணை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிராவில் மக்கள் ஆசி யாத்திரையில் ஈடுபட்ட இவர், சிவசேனாவை சேர்ந்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சுதந்திர தினத்தன்று உரையாற்றிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டு கேட்டு தெரிந்து பேசுகிறார். இது அவமானகரமானது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் முதல்வர் கன்னத்தில் பளார் என அறைந்திருப்பேன் என்று நாராயணன் ரானே பேசினார். இவரது பேச்சை கண்டித்து, மும்பை உள்ளிட்ட பல இடங்களில் சிவசோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சிவசேனா - பாஜவினர் இடையே மோதலும் உருவானது. இது தொடர்பாக, நாசிக் காவல் நிலையத்தில் சிவசேனா புகார் அளித்தது. அதன் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். அவர் மீது, அவதூறு, பகைமை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதே போல் அவுரங்காபாத்திலும் ரானே மீது புகார் பதியப்பட்டுள்ளது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement