dinamalar telegram
Advertisement

வெண்டைக்காய் இலவசமாக வழங்கிய விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வ.சின்னகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அழகு இளங்கோ, 38; விவசாயி. வெண்டை பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது . 50 கிலோ வெண்டைக்காய் மூட்டையை 100 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். போக்குவரத்து செலவுக்கு கூட பணம் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இளங்கோ, வெண்டைக்காய்களை மினி வேன் மற்றும் டிராக்டரில் உளுந்துார்பேட்டைக்கு கொண்டு சென்றார். விற்றாலும் லாபம் கிடைக்க போவதில்லை . நகரில் அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் தான் சம்பாதிக்க போகிறார்கள் என நினைத்தார். அதனால் தாலுகா அலுவலகம் முன் வண்டிகளை நிறுத்தி, பொதுமக்களுக்கு இலவசமாக வெண்டைக்காய் கொடுத்தார். பை நிறைய காய்களை பலர் வாங்கி சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement