dinamalar telegram
Advertisement

உலக தடகளம் இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 18 ம்தேதி தொடங்கியது. நேற்று முடிந்தது. கடைசி நாளில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் 17 வயது நிரம்பிய ஷைலி சிங் பங்கேற்றார். 6.59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவிப்போனது. 6.60 மீட்டர் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா தங்கம் வென்றார். உக்ரைன் வீராங்னை வெண்கலம் வென்றார். இது, சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் 3வது பதக்கமாகும். 4 இண்ட் 400 கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது. 10 ஆயிரம் மீட்டர் நடை பந்தயத்தில் அமித் காத்ரி வெள்ளி வென்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement