dinamalar telegram
Advertisement

நிதிநெருக்கடியில் சாதனை விளம்பரம் தேவையா?

நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக கூறும் தமிழக அரசு, கோடிக்கணக்கில் செலவு செய்து பக்கத்து மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்கள் செய்வதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கடன் அளவு உயர்ந்து வருவதால் தமிழக அரசின் நிதி நிலை மோசமாக உள்ளதாக நிதி அமைச்சர் தியாகராஜன் புள்ளிவிபரங்கள் வெளியிட்டார். இதனை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்த மக்கள் ஏமாந்து நிற்கின்றனர். ஆனால் திமுக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement