dinamalar telegram
Advertisement

தேச துரோக வழக்கு பதிவு

ஆப்கனில் தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றியது தொடர்பாக சம்பல் தொகுதி சமாஜ்வாடி எம்.பி சபிக்குர் ரஹ்மான் பர்க் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். பிரிட்டிஷார் ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது விடுதலைக்காக நம் நாட்டவர் போராடினர். அதேபோல, தங்கள் நாடு விடுதலை அடைய வேண்டுமென தலிபான்கள் போராடினர். ஆப்கனை ஆளவும் அவர்கள் விரும்புகின்றனர்; இதில் என்ன தவறு? என கூறியிருந்தார். இது தொடர்பாக சம்பல் மாவட்ட போலீசார் சபிக்குர் ரஹ்மான் பர்க் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை தலிபான், பயங்கரவாத இயக்கம். இப்படிப்பட்ட சூழலில் தலிபான் பயங்கரவாதிகளுடன் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒப்பிடுவது தேச துரோக குற்றம்; அதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சம்பல் எஸ்.பி சர்கேஷ் மிஸ்ரா கூறினார். வழக்கு போட்டதும் சபிக்குர் ரஹ்மான் தான் அப்படி சொல்லவே இல்லை என பல்டியடித்தார். நான் இந்திய குடிமகன், ஆப்கன் குடிமகன் அல்ல; ஆப்கனில் என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை; மத்திய அரசின் கொள்கைகளை ஆதரிக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement