dinamalar telegram
Advertisement

தேசத்துக்கே வழிகாட்டும் திண்டுக்கல் மகளிர் குழு மோடி பாராட்டு!

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினார். தமிழகத்தில், திண்டுக்கல், பஞ்சம்பட்டியில் செயல்பட்டு வரும் இன்டஸ் ஜவா மகளிர் குழுவினரிடம் பிரதமர் உரையாடினார். கிராமங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை மகளிர் குழுவினர் சேகரித்து மறுசுழற்சி செய்து சாலை போடுவதற்கு வழங்கி வருகின்றனர். அது பற்றி மோடி கேட்டறிந்தார். இதுவரை, 102 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ததன் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டதாகவும் மகளிர் குழுவினர் தெரிவித்தனர். அதைக் கேட்ட பிரதமர் மோடி, உங்களது செயல்பாடு தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்த தேசத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறது என மகளிர் குழுவினரை பாராட்டினார். #Modi #Dindigul #DinamalarVideo
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement