dinamalar telegram
Advertisement

மருத்துவக் கல்லூரிகள் ஆக.16ல் திறப்பு

கோவிட் நோய் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பள்ளிக் குழந்தைகள் பல மாதங்களாக வீட்டில் முடங்கிக் கிடப்பதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்; கற்றலில் பெரும் இடைவெளி ஏற்படுகிறது என நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். எனவே, பள்ளிகளை திறக்க வேண்டியது அவசியம் எனவும் கருத்து தெரிவித்தனர். அனைத்து தரப்பினரின் கருத்துக்களை ஆராய்ந்து, 9,10,11,12ம் வகுப்புகளுக்காக செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தினமும் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவம், செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement