dinamalar telegram
Advertisement

வீடுகளை இடிக்கும் போது மனசும் உடைந்தது | நேரடி ரிப்போர்ட்

சென்னை நதிகள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்குள்ள குடும்பங்கள் , குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் இடமாறி வருகின்றனர். அரும்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் கூவம் ஓரம் 330க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதில் 93 பேருக்கு மட்டுமே வியாசர்பாடியில் மாற்று குடியிருப்பு கொடுக்கப்பட்டுள்ளது . கடந்த 29 ஆம் தேதி , போலீசோடு வந்த அதிகாரிகள் அனைவரையும் காலி செய்ய கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் , வீடுகளில் தங்க முடியாமல் அப்பகுதிவாசிகள் வேதனையில் உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் , தெரிந்தவர்கள் வீடுகளில் பெண்கள் , குழந்தைகள் தங்கி விட்டு , காலை இங்கு வருகின்றனர் . எந்த வசதியும் இல்லாத இடத்தில் , பள்ளி மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர் . உணவுக்கு கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement