dinamalar telegram
Advertisement

சென்னையில் கடைகள் மார்க்கெட் மூட உத்தரவு

சென்னையில் சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 9ம் தேதி வரை வரை கடைகள் திறக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், வடக்கு உஸ்மான் ரோடு, மாம்பலம், புரசைவாக்கம், ராயபுரம் மற்றும் அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க கூடாது. கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை. கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால், வழக்கம்போல் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சரக்குகளை வாங்கி வைத்துவிட்டு, கடைகள் மூடி கிடப்பதால், பொருளாதார இழப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். #ShopClosed #Lockdown #Chennai #TNAGAR #ChennaiCrowd #CoronaLockdown #ChennaiPolice
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement