dinamalar telegram
Advertisement

டெய்லரிடம் ரூ 10 லட்சம் வழிப்பறி : இன்ஸ் வசந்தி சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம் , இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத் . வயது 32 . டெய்லர் . பேக் தயாரிக்கும் கம்பெனி தொடங்க முடிவு செய்தார் . தெரிந்தவர்களிடம் 10 லட்சம் கடன் வாங்கினார். கூடுதலாக 5 லட்சம் தேவைப்பட்டது . நண்பர் மூலம் அறிமுகமான , மதுரை , நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் வட்டிக்கு பணம் தருவதாக கூறினார். இதை வாங்க, அப்பகுதியில் உள்ள மாவு மில் பேருந்து நிலையத்தில் அர்ஷத் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சென்றார் . பாண்டி வர காத்திருந்தார். கையோடு பை தயாரிக்கும் மிஷின் வாங்கி விடலாம் என பாண்டி கொடுத்த ஆலோசனையை ஏற்று , ஏற்கனவே கடன் வாங்கிய 10 லட்சம் ரூபாயையும் எடுத்து சென்று இருந்தார் . அப்பகுதி வழியாக சென்ற இன்ஸ்பெக்டர் வசந்தி , ஜீப்பை நிறுத்தி அர்ஷத்திடம் விசாரித்தார். பையில் 10 லட்சம் ரூபாய் எதற்கு என கேட்ட போது , பேக் கம்பெணி குறித்து கூறினார் . உங்கள் மீது சந்தேகமாக உள்ளது என சொன்ன வசந்தி , 10 லட்சத்தை பிடுங்கி ஜீப்பில் ஏறினார் . நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் பொறுப்புள்ள வசந்தி , விசாரணைக்கு தல்லாகுளம் ஸ்டேஷனுக்கு அர்ஷத்தை வர சொல்லியுள்ளார். அங்கு சென்று பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ஆனால் கஞ்சா கேசில் உள்ளே தள்ளிவிடுவேன் என அர்ஷத்தை வசந்தி மிரட்டினார் . இது குறித்து எஸ் பி பாஸ்கரிடம் அர்ஷத் புகார் அளித்தார். எடிஎஸ்பி சந்திரமவுலி விசாரித்தார். கடன் தருவதாக சொல்லி அர்ஷத்தை வரவழைத்து பணம் பிடுங்க பாண்டி ,அவரது நண்பர் கார்த்திக் , இஸ்பெக்டர் வசந்தி திட்டம் போட்டது விசாரணையில் தெரிந்தது . பண மோசடி , மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . இஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அர்ஷத்திடம் பணம் ஒப்படைக்க ஏற்பாடு நடக்கிறது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement