dinamalar telegram
Advertisement

மனைவி மகள்களுடன் உருக்கமான சந்திப்பு

கோவை அரசு மருத்துவமனை அருகே மே 1ம்தேதி மயங்கிக் கிடந்த முதியவரை ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பினர் மீட்டு காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். முதியவருக்கு நினைவு வந்ததும் விசாரித்தனர். பெயர் ரங்கசாமி; வெள்ளலூரைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. ஏப்ரல் இறுதியில் கட்சி கூட்டத்துக்காக ரங்கசாமியை கோவைக்கு கூட்டி வந்துள்ளனர். கூட்டம் முடிந்ததும் கைகழுவி விட்டு சென்றனர். ஊருக்கு போக வழி தெரியாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கினார். காய்ச்சல் அடித்ததால் கோவை அரசு மருத்துவமனை நோக்கி மெல்ல நடந்தார். மருத்துவமனை அருகே சென்றபோது மயங்கி விழுந்தார் என்பது தெரிந்தது. ரங்கசாமியை ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பினர், வெள்ளலூருக்கு அழைத்து சென்றனர். 88 நாள் கழித்து ரங்கசாமியை பார்த்த மனைவி, மகள்கள் கண்ணீர் வடித்தனர். ெஹல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பினரின் கால்களில் விழுந்து நன்றி சொன்னார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement