dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாமில் கியூவில் நின்றபடி சாப்பிட்ட மக்கள்

கரூர் மாவட்டத்தில் 16 மையங்களில் இன்று 4800 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாமில் , காலை 5 மணி முதல் மக்கள் வரிசையில் நின்றனர் . 7.30 மணி அளவில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டது . ஒரு நாளுக்கு 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்பதால் , காத்திருந்த 100க்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் . சாப்பிட்ட பின்பு தான் தடுப்பூசி போடப்படும் என்பதால் காலை,மதிய உணவை சிலர் பொட்டலம் கட்டி எடுத்து வந்தனர் , பலர் உறவினரை விட்டு எடுத்து வர சொல்லி கியூவில் நின்றபடி சாப்பிட்டனர் . மதியம் ஆனதும் , வெயில் கொளுத்தியது . வரிசையில் காத்திருந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்க மரத்தடிக்கு சென்றனர். நின்று இருந்த இடத்தை யாரும் பிடித்து விட கூடாது என்பதற்காக ,உஷாராக செருப்பை கழற்றி வைத்துவிட்டு அருகில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினர் . கரூரில் இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement