dinamalar telegram
Advertisement

மேலவை தேவையா தண்டமா.. | Detailed Report | Dinamalar

1986ல், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை, அ.தி.மு.க., சார்பில் மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்ய, எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். திவாலானவர் என, அறிவிக்கப்பட்ட நிர்மலா பதவி ஏற்பதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. ஆளுநர் குரானாவும் கேள்வி எழுப்பினார். எம்.ஜி. ஆர் உடனே மேல்சபையை கலைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து மேல்சபையை கலைத்து ஜனாதிபதி உத்தரவிட்டார். கலைக்கப்பட்டபோது மேலவை எதிர்க் கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தார்.1989ல் திமுக ஆட்சி வந்தபின் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற பிரதமர் வி.பி.சிங் எடுத்த முயற்சி பலனனிக்கவில்லை. 1991ல் திமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #TN_Assembly #Stalin #MGR #Karunanidhi #Jayalalitha
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement