dinamalar telegram
Advertisement

வாடகையில் பாதி மின் கட்டணம் ! பொதுமக்கள் வேதனை

தமிழகத்தில், மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது . முதல் 100 யூனிட்கள் இலவசம் . அதற்கு மேல் பயன்படுத்தினால் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது . வீடுகளுக்கு சென்று ஊழியர்கள் மின் பயன்பாடு கணக்கு எடுத்து வந்தனர் .கோவிட் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடுக்க முடியவில்லை . 2019 ஏப்ரல் மாத கட்டணம் அல்லது வீட்டில் மின் கணக்கீடு எடுத்து , வாட்ஸ் ஆப்பில் மின் ஊழியருக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது . அதன் பிறகு மின் கணக்கீடு செய்து தரப்படும் என மின் ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மின் கட்டணம் வந்துள்ளதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர் . கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களும் , கட்டணத்தை குறைக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement