dinamalar telegram
Advertisement

சூப்பர் புவனேஷ்வர்

இலங்கை தொடரில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டியில் சோபிக்காத இவர், இரண்டாவது போட்டியில் எழுச்சி காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஷ்வர், நான்கு ஆண்டுகளில் (2017-2021) விளையாடிய ஒருநாள் போட்டியில் 60 இன்னிங்சில் 78 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் 'கேட்ச்' மூலம் 52 விக்கெட் கிடைத்தது. 16 கிளீன் போல்டு, 7 எல்.பி.டபிள்யு., 3 கேட்ச் & போல்டு முறையில் விக்கெட்டுகள் கிடைத்தன. புவனேஷ்வர் குமார், துவக்க ஓவரில் (1-10) நம்பிக்கை தருகிறார். இந்த ஓவரில் 31 விக்கெட் கைப்பற்றிய இவரது 'எகானமி' 4.40 ஆக உள்ளது. 'மிடில்-ஓவரில்' ஏமாற்றுகிறார். புவனேஷ்வர் குமார், ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்சில் 44 விக்கெட் சாய்த்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் 34 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement