dinamalar telegram
Advertisement

மெஸ்சி சம்பளம் குறைஞ்சு போச்சு!

அர்ஜென்டினா அணிக்காக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று தந்த கேப்டன் மெஸ்சிக்கு அதிர்ச்சி. கொரோனா தாக்கம் காரணமாக இவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்சி, 2000ம் ஆண்டு முதல் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடுகிறார். 778 போட்டிகளில் பங்கேற்று 672 கோல் அடித்துள்ளார். 10 லா லிகா, 4 சாம்பியன்ஸ் லீக், 7 கோபா டெல் ரேய்ஸ் கோப்பை வென்று தந்துள்ளார். 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணியில் நீடித்த இவரது ரூ. 4,422 கோடி சம்பள ஒப்பந்தம் ஜூன் 30 ல் முடிந்தது. கோபா தொடரில் அசத்திய நிலையில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முந்தைய சம்பளத்தில் 50 சதவீதம் குறைவாக, ரூ. 2,211 கோடிக்கு, 2026 வரை பார்சிலோனா அணியில் தொடர மெஸ்சி முடிவு செய்துள்ளார். கொரோனா காரணமாக பார்சிலோனா அணியின் செலவுகள் குறைக்கப்பட்டன. இதனால் மெஸ்சியும் சம்பளத்தை 'கட்' செய்து கொள்ள சம்மதித்தாராம். அடுத்த இரு ஆண்டுக்குப் பின் விருப்பம் இல்லை என்றால் பார்சிலோனா அணியை விட்டு விலகிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement