dinamalar telegram
Advertisement

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து

அயர்லாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி டப்ளினில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஆன்டி பால்பிர்னி 117 பந்தில், 2 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 102 ரன் எடுத்து கைகொடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹாரி டெக்டர் 79 ரன் எடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 290 ரன் குவித்தது. சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஜேன்மேன் மாலன் 84, வான் டெர் துசென் 49 ரன் எடுத்து நம்பிக்கை தந்தனர். மார்க்ரம், டேவிட் மில்லர், கேப்டன் பாவுமா உள்ளிட்ட மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 48.3 ஓவரில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' 43 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இவ்விரு அணிகள் 7 முறை மோதின. இதில் தென் ஆப்ரிக்கா 5, அயர்லாந்து ஒரு போட்டியில் வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement