dinamalar telegram
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2020 ஜனவரியில் 4 சதவீதம், 2020 ஜூனில் 3 சதவீதம், 2021 ஜனவரியில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால், கோவிட் பரவலை கட்டுப்படுத்த நிதி தேவைப்பட்டதால் மூன்று தவணை அகவிலைப்படி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும்? என ஊழியர்கள் பல மாதங்களாக காத்திருந்தனர். அதை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 28 சதவீதமாக உயர்கிறது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என, 1.2 கோடி பேர் பலன் பெறுவார்கள். ஆனால், 1.1.2020 முதல் 30.6.2021 வரையிலான நிலுவைத்தொகை வழங்கப்படமாட்டாது. ஜூலை 1ம்தேதி முதல் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement