Load Image
dinamalar telegram
Advertisement

ஒலிம்பிக் வீரர்களுக்கு மோடி வாழ்த்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் வீடியோ கான்பிரன்ஸில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீர்களுக்காக நாடு முழுவதும் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருவதாக கூறினார். வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு, குறிக்கோள் அனைத்தும் உள்ளது. இந்த நற்பண்புகள் புதிய இந்தியாவுக்கு வழிகாட்டும். முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள். இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது என்றார். கலந்துரையாடலில், தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், சரத்கமல் மற்றும் மேரிகோம், பிவி சிந்து, தீபிகா குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில், 18 விளையாட்டு போட்டிகளில், மொத்தம் 126 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement