dinamalar telegram
Advertisement

பதக்கம் வெல்வேன் பெருமை சேர்ப்பேன் நாகநாதன் உறுதி

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் 4 இண்ட் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த நாகநாதன் பாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றுகிறார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப்பில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் நாகநாதன் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று, ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கும், தமிழக காவல்துறைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பேன் என நாகநாதன் கூறினார். அவரால் சிங்கப்புலியாபட்டிக்கு பெருமை கிடைத்திருப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement