dinamalar telegram
Advertisement

ஆந்திராவில் மேம்பாலம் இடிந்தது 2 பேர் பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாப்பள்ளி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மாலையில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது திடீரென மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு லாரி, ஒரு கார், சில பைக்குகள் நசுங்கின. காரில் இருந்த 2 பேர் பலியாயினர். இன்னும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலில் வெடிகுண்டுதான் வெடித்ததோ என நினைத்து பயந்து போய் ஓடினோம். பிறகுதான் பாலம் இடிந்தது தெரிந்தது என அப்பகுதி மக்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement