dinamalar telegram
Advertisement

வேலை இழந்து கேரளா திரும்பிய 10 லட்சம் பேர் !

கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 27 லட்சம் பேர் வேலைக்கு சென்றனர். கடந்த ஆண்டு கோவிட் தொற்று பரவ தொடங்கியதால், அவர்கள் மீண்டும் கேரளாவுக்கு திரும்ப தொடங்கினர். கடந்தாண்டு மே முதல் இந்தாண்டு மே வரையிலான 13 மாதங்களில், 14.63 லட்சம் பேர் கேரளாவுக்கு திரும்பியுள்ளனர். இவர்களில் 96 சதவீதம் பேர் சுவூதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரசு அமீரகம் நாடுகளில் பணியாற்றி வந்தவர்கள். இதில், 10.45 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 2.80 லட்சம் பேர் விசா காலம் முடிந்ததால் மீண்டும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். வெளிநாட்டில் வேலை இழந்தவர்களுக்கு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. இதற்கு 1.7 லட்சம் பேர்தான் விண்ணப்பித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement