dinamalar telegram
Advertisement

கர்ப்பிணிகளும் தடுப்பூசி போடலாம் அரசு அறிவிப்பு

இந்தியாவில் கர்ப்பிணிகளை தவிர, 18 வயதை தாண்டிய அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது, கர்ப்பிணிகளுக்கும் கோவிட் தடுப்பூசி போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் கோவிட் நோய் தொற்று ஏற்பட்டால், அது கர்ப்பிணிகளின் உடல்நலனை மோசமடைய செய்து ஆபத்தில் கொண்டு போய்விடும். கருவையும் தொற்று பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், கர்ப்பிணிகள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்தது. அதை சுகாதார அமைச்சகம் ஏற்றது. தடுப்பூசி போட விரும்பும் கர்ப்பிணிகள், கோவின் வெப்சைட்டில் பதிவு செய்தோ அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement