dinamalar telegram
Advertisement

வரும் மாதங்களில் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் WHO எச்சரிக்கை

ஒரிஜினல் கொரோனா வைரசை விட இரண்டரை மடங்கு வேகமாக பரவக்கூடியது டெல்டா வகை வைரஸ். இந்தியாவில் கோவிட் 2வது அலையின்போது கடுமையான பாதிப்புகளை டெல்டா வைரஸ்தான் ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 96 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. அதையும் சேர்த்தால் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் 100ஐ தாண்டும். டெல்டா வைரசின் பரவக்கூடிய தன்மை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொள்ளும்போது, உலகளவில் வரும் மாதங்களில் டெல்டா வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கும்; மற்ற வகை வைரஸ்களை மிஞ்சும் வகையில் பாதிப்பு இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement