dinamalar telegram
Advertisement

கொடைக்கானல் பஸ் பயணிகள் கடுப்பு

கோவிட் பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு , ஏர்பல் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது . உள்ளூர் மக்கள் , அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆதார் , ஐடி கார்டு காட்டி பஸ்சில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகளுக்கு செல்பவர்கள் இ பாஸ் அப்ளை செய்ய வேண்டும் . இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே பஸ்சில் பயணிகளுக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. விவரங்கள் நோட் செய்து புறப்படுவதற்கு நேரம் ஆகிறது. . கார் உள்ளிட்ட வாகனங்களில் சொகுசாக செல்பவர்களுக்கு டெஸ்ட் எடுப்பதில்லை , ஆனால் பஸ்சில் பல மணி நேரம் பயணிக்கும் எங்களை மட்டும் காத்திருக்க வைத்து எதுக்கு டெஸ்ட் எடுக்கிறார்கள் என பயணிகள் கடுப்பாகியுள்ளனர் . இது தவிர நகருக்கு வரும் வெளி மாவட்டத்தினர் ,ஏரி சாலையில் ஜாலியாக சைக்கில் ஓட்டுகின்றனர் , குதிரை சவாரி செல்கின்றனர் . இவர்களால் கோவிட் பரவதா ? அவர்களுக்கு ஏன் டெஸ்ட் எடுக்கவில்லை ? என கேள்வி எழுப்பினர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement