dinamalar telegram
Advertisement

கோவிட் ஊழியர் என ஏமாற்றி இருவர் கொலை

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே கேஜி வலசு பொருமாள்வலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். வயது 75 . நேற்று முன் தினம் இவர் வீட்டுக்கு சென்ற இளைஞர் , மாநகராட்சி உத்தரவு படி வீடு வீடாக கோவிட் டெஸ்ட் எடுக்கிறோம் , அதனால் உங்கள் குடும்பத்துக்கும் எடுக்க வேண்டும் என்றார். வீட்டில் கருப்பணன் , மனைவி மல்லிகா , மகள் தீபா மற்றும் தோட்ட வேலைக்கு வந்த குப்பம்மாள் இருந்தனர் . டெஸ்ட் எடுக்கும் முன் நான்கு பேருக்கும் ஏதோ ஒரு மாத்திரை கொடுத்தார் . அனைவரும் அதை எடுத்துக்கொண்ட பிறகு , கோவிட் டெஸ்ட் எடுத்து கிளம்பினார் . கொஞ்ச நேரத்தில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர் . அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர் . தீபா மற்றும் குப்பம்மாள் இறந்தனர் . இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . டெஸ்ட் எடுத்து சென்றவர் மீது சந்தேகம் வந்தது . இது தொடர்பாக கருப்பணன் போலீசில் புகார் அளித்தார் . விசாரித்து வந்தனர் . கருப்பணன் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வந்து விவசாயம் செய்து வந்த கல்யாண சுந்தரம் , அவரது உதவியாளராக இருந்த கல்லூரி மாணவன் சபரி தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிந்தது . இவருவரையும் கைது செய்து விசாரித்தனர் . கருப்பணன் தனது உறவினரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி, கல்யாண சுந்தரதுக்கு வழங்கியுள்ளார் . ஆனால் கல்யாண சுந்தரம் வட்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் . கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொண்டே இருந்தார் கருப்பணன் . இதனால் ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம், அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி , கல்லூரி மாணவரை வைத்து கருப்பணன் குடும்பத்தை போட்டு தள்ள முடிவு செய்தார் . கருப்பணன் வீட்டுக்கு சென்று டெஸ்ட் எடுத்தது மாநகராட்சி ஊழியர் இல்லை . சால்பாஸ் மாத்திரை கொடுத்து குடும்பத்தை போட்டு தள்ள தான் சபரி என்பவர் சென்றது தெரிந்தது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement