dinamalar telegram
Advertisement

பெட்டி என்னாச்சு? சீமான் கேள்வி

சட்டசபை தேர்தலின்போது, மக்களிடம் மனுக்கள் பெற்ற ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்திருந்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தின் பிரச்னைகளுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று திமுகவினர் வானளவ அளந்தார்கள். 50 நாட்களை கடந்துவிட்டோம். எல்லா பிரச்னைகளையும் எப்போது தீர்க்க போகிறார்கள்? என கேட்டுள்ளார். மக்கள் பிரச்னைகளை மனுக்களாக பெற்ற பெட்டிகள் எங்கே போனது? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை பெட்டியே தொலைந்துவிட்டா என்று சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். பிரச்சாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற துறையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியது நினைவிருக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement