dinamalar telegram
Advertisement

கவர்ச்சி விளம்பரம் மூலம் மதுரையில் 60 கோடி மோசடி

மதுரை காளவாசல் பகுதியில் ப்ளை வேர்ல்டு ஷேர்ஸ் ஒபிசி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ட்ரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்தி, மனோஜ் குமார், மதுரையைச் சேர்ந்த சையது பாரூக் 3 பேரும் இணைந்து நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 120 நாட்களில் முதலீடு இரட்டிப்பாகும் என சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு முதல் இரண்டு மாதம் பணத்தை அள்ளி வழங்கினர். அதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ 2500 முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். சில மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். உரிமையாளர்களை தொடர்பு கொண்டபோது மூவரும் தலைமறைவானது தெரிந்தது. இதுபற்றி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். தலைமறைவான உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement