dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் முதல் நபருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி

வேகமாக பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 40க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், முதலாவதாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement