dinamalar telegram
Advertisement

ஹைவே ஊழல் போலி பட்டா மூலம் 126 கோடி இழப்பீடு பெற்றது அம்பலம்

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக 20 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே பீமன்தாங்கல் என்ற கிராமத்தில் 83 நபர்களின் பெயரில் இருந்த 9 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. இதுற்காக 126 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. உண்மையில், கையகப்படுத்தப்பட்ட 9 ஏக்கர் நிலம் தனி நபர்களுக்கு சொந்தமானது அல்ல; அரசுக்கு சொந்தமானது என்பது ஆய்வில் தெரிய வந்தது. போலி பட்டா மூலம் இழப்பீடு பெற்றிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில அதனடிப்படையில் போலி பட்டாவை தயார் செய்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆசிஷ் மேத்தா, செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 83 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை திரும்பப் பெறும் முயற்சியாக, அவர்களது வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். போலி ஆவணங்களின் அடிப்படையில் நிலப்பட்டா வழங்கியது, போலி பட்டா என தெரிந்தும் இழப்பீடு கிடைக்க ஆவன செய்தது போன்ற செய்கைகளுக்காக முன்னாள் இந்நாள் அதிகாரிகள் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் 6 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் மோசடி நடந்துள்ளதா என விசாரணை நடத்த சிறப்பு குழுக்களை அமைத்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement