dinamalar telegram
Advertisement

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 920 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் உள்ளது. இங்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ ஆக்சிஜன் பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 150 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கமுடியும். கட்டமைப்பு பணிகள் 10 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கபடும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement