dinamalar telegram
Advertisement

ரொனால்டோ புதிய சாதனை

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் ரொனால்டோவின் 'நடப்பு சாம்பியன்' போர்ச்சுகல் அணி, ஹங்கேரியை சந்தித்தது. இதில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 2 கோல் அடித்த ரொனால்டோ, யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ந்து ஐந்து தொடரில் கோல் அடித்த முதல் வீரர் ஆனார். தவிர, ஒட்டுமொத்த யூரோ தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் பிளாட்டினியை (9, பிரான்ஸ்) முந்தி முதலிடம் பெற்றார் ரொனால்டோ. இவர் 11 கோல் அடித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement