dinamalar telegram
Advertisement

காஷ்மீருக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் சுரங்கப்பாதை!

காஷ்மீரில் உள்ள காசிகண்ட் மற்றும் பனிஹால் Qazigund-Banihal பகுதிகளை இணைக்கும் வகையில் 8.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த சுரங்கப்பாதை திறக்கப்படவுள்ளது. குளிர் காலத்தில் ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விடும். நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்படும். 2 முதல் நான்கு நாட்கள் வரை வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். உரிய நேரத்தில் மேல் சிகிச்சை கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்து போவதும் உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகள். சுற்றுலா பயணிகளும் நடுவழியில் சிக்கி அவதிப்படுவர். காசிகுண்ட் பனிஹால் சுரங்கப்பாதை திறக்கப்பட்டவுடன் இந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும்; ஸ்ரீநகர் ஜம்மு நகரங்கள் இடையே குளிர்காலத்திலும் போக்குவரத்து தங்கு தடையின்றி நடக்க இந்த சுரங்கப்பாதை உதவும் என காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குளிர் காலத்தில் ஜம்மு ஸ்ரீநகர் இடையிலான பயண நேரத்தை இந்த சுரங்கப்பாதை வெகுவாக குறைக்கும்; சுரங்கப்பாதையில் இருந்து உஷ்ணக்காற்றை வெளியேற்றி விட்டு தூய காற்றை உள்ளே கொண்டு வரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என திட்ட அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா . 13-ஜூன்-2021 08:13 IST

காங்கிரஸ் தலைவர்கள் திருவாளர்கள் ராகுல் காந்தி தொடங்கி அனைத்து காங்கிரஸ் தலைவர்களும்( காங்கிரஸில் தொண்டர்கள் , மற்ற கட்சி பொறுப்புகளில் யாரும் இல்லை. அனைவரும் தலைவர்கள் தான்) இந்த சுரங்க பாதையை உபயோகிக்க மாட்டார்கள்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement