dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனைகளில் காலி

இந்தியாவில் கடந்த மே மாதம் 7.4 கோடி டோஸ் தடுப்பூசி தயாரானது. அதில், 25 சதவீதம் அதாவது, 1.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 1.3 கோடி டோசை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வாங்கின. வாங்கியதையும் முழுமையாக தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தவில்லை; 22 லட்சம் டோஸ்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளன. எஞ்சிய 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் சும்மா கிடக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட்க்கு 780 ரூபாய், ஸ்புட்னிக் வி க்கு 1145 ரூபாய் கோவாக்சினுக்கு 1410 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் விரும்பாததுதான் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேங்கக் காரணம் என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement