dinamalar telegram
Advertisement

மதுக்கடை திறப்பதற்கு ராமதாஸ் கண்டனம்

திங்கள் முதல், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை திறப்பதால் தொற்று பரவல் அதிகரிக்கும். கோவிட் நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கிய அரசு, அதை பறிக்கும் நோக்கில் மதுக்கடைகளை திறப்பது நியாயமா? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா? என்று கேட்டுள்ளார். மதுக்கடை திறக்கப்பட்டால், ஏழை குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். அந்த குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும். வன்கொடுமை பெருகும். இதை தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement