dinamalar telegram
Advertisement

மம்தாவிடம் திரும்பி வந்தார் முகுல் ராய்!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முகுல் ராய், 2017ல் பாஜவில் இணைந்தார். பா.ஜ தேசிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்குமுன் சுவேந்து அதிகாரி உட்பட இன்னும் பல தலைவர்கள் பாஜவுக்கு தாவினர். திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் அக்கட்சிக்கு திரும்ப பலரும் தூது விட்டனர். முதல் தலைவராக முகுல் ராய் மம்தா கட்சிக்கு திரும்ப வந்துள்ளார். கொல்கத்தாவில் இன்று மாலை முதல்வர் மம்தாவை சந்தித்து, திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். பாரதிய ஜனதாவுக்கு போன இன்னும் பலர் திரும்பி வரும் மனநிலையில் இருப்பதாக முகுல் ராய் சொன்னார். சிபிஐயின் மிரட்டலால் முகுல் ராய் பாஜவில் சேர்ந்தார். திரிணாமூல் பற்றி அவர் அவதூறாக எதையும் பேசவில்லை; அவருக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என மம்தா கூறினார். இன்னும் பலர் பாஜவை விட்டு, இங்கு வருவார்கள்; ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன் பணத்துக்கு ஆசைப்பட்டு கட்சி தாவிய துரோகிகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என மம்தா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement