dinamalar telegram
Advertisement

பழனிசாமி விளக்கம் தருகிறார்

அதிமுகவின் சட்டசபை எதிர்கட்சி தலைவராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு , அவரும் பன்னீர்செல்வமும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர் . தனியாக அறிக்கை விடுகின்றனர் , பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றனர் . நேற்று கட்சி அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . பன்னீர் கலந்துக்கவில்லை . கூட்டம் முடிந்த பிறகு பழனிசாமி பேட்டி அளித்தார் . பன்னீர்செல்வம் வீட்டில் கிரக பிரவேசம் , அதனால் கூட்டத்தில் அவர் பங்கேற்றவில்லை , எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்தார் . சென்னை எழுப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பன்னீரை பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார் . பன்னீர் தம்பி பாலமுருகன் மறைவுக்கு ஆறுதல் கூற சென்றதாக நிர்வாகிகள் சொல்கின்றனர் . கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்று இருந்தால் சட்டபசை எதிர்கட்சி துணை தலைவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பர் .ஆனால் தலைமை அதிகார பதவிக்கு ஆசைப்படும் பன்னீருக்கு அதில் விரும்பமில்லை . அதை தவிர்க்கவே கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வில்லை என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement