dinamalar telegram
Advertisement

வங்கி கணக்கில் 2,000 செலுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?

பொதுமக்களுக்கான உதவி தொகையை மத்திய அரசு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறது. இடை தரகர்கள் அல்லது அரசியல் வாதிகளின் குறுக்கீடு இல்லாமல், யாருக்கும் கப்பம் கட்ட தேவை இல்லாமல் அக்கவுன்டில் பணம் சேருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால்பல மாநில அரசுகளும் டைரக்ட் டிரான்ஸ்பர் என்று சொல்லப்படும் இந்த முறைக்கு மாறிவிட்டன. இது மிகவும் சுலபமான நடைமுறையும் கூட. ஆனால், தமிழக அரசு பிடிவாதமாக இன்னமும் ரொக்க பட்டுவாடா முறையை பின்பற்றுகிறது. கொரோனா நிவாரணத்துக்காக பொதுமக்களுக்கு வழங்கும் 4000 ரூபாயை ரேஷன் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்குகிறது. அதையும் இரண்டு தவணைகளாக பிரித்து தருகிறது. முதல் தவணை பெரும்பாலும் கொடுத்து முடிந்து விட்டது. இரண்டாவது தவணையான 2,000 ரூபாயை வரும் 3 ம் தேதி முதல் கொடுக்க இருக்கிறது. 2,000 ரூபாய் கொடுக்க 500 ரூபாய் கமிஷனாக பெற்றதாக தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த சம்பவம் விடியோ பதிவாக நாடு முழுவதும் பரவியது. கலெக்டர் ஆபீசுக்கு பங்கு கொடுக்க வேண்டுமே என தாசில்தார் சொல்வது கேட்கிறது. மற்ற ஊழியர்களும், “இதெல்லாம் சகஜமப்பா..” என கவுண்டமணி பாஷையில் சொல்கின்றனர். பல இடங்களில் கட்சிக்காரர்கள் தலையீடு பகிரங்கமாக நடக்கிறது. ஆனால்,” ஓசியில் கிடைக்கிற பணத்தில் கொஞ்சம் கப்பம் கட்டினால் என்ன ஆகிவிட போகிறது?” என்ற சிந்தனை பலருக்கு இருப்பதால், யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை. இது தவிர, என்னதான் போலீஸ் நிறுத்து வட்டம் எல்லாம் வரைந்தாலும், ரேஷன் கடைகளில் பணம் வாங்க மக்கள் ஒட்டிக் கொண்டும் மாஸ்க் இறக்கி விட்டும் நிற்பதை பார்க்க முடிகிறது. கோவிட் நிவாரணம் என நல்ல எண்ணத்தோடு அரசு வழங்கும் உதவி, அந்த தொற்று மேலும் பரவ வழி வகுக்கிறதே? என்று கவலைப் படுகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆகவே, ஒன்று மத்திய அரசு செய்வது போல வங்கி கணக்கில் 2000 ரூபாய் போட வேண்டும்; அல்லது வீடு வீடாக கொண்டுபோய் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர். மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் ஸ்டாலின் இதை செய்வார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ரேஷன் கடைகளில் மளிகை பொருள் தொகுப்பும் வழங்க இருப்பதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது என போலீஸ் கவலைப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement