dinamalar telegram
Advertisement

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் அறிவிப்பு

கோவிட் நோய் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24 ம்தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 31 ம்தேதி காலை 6 மணிக்கு முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றிலிருந்து விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கில் முழு ஊரடங்கை ஜூன் 07 ம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும். மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை மளிகை பொருட்ளை டோர் டெலிவரி செய்யலாம் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர நியாய விலைக் கடைகள் மூலம் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மாதம் முதல் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது; எனவே, மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்; கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement