dinamalar telegram
Advertisement

வெற்றிலை வாடுவதால் விவசாயிகள் வேதனை!

தேனி மாவட்டம் பெரியகுளம் , வடுகபட்டி , சில்வார்பட்டி , ஜெயமங்களம் , அழகர் நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் வெற்றிலைகள், சென்னை , திருச்சி , கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் . ஊரடங்கால், 20 நாட்களுக்கு மேலாக வெற்றிலையை பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். பராமரிப்பில்லாமல் வெற்றிலை கொடிகளும் வாடுவதால், அடுத்த மகசூல் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement