dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 236 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு!

நாடு முழுவதும் இதுவரை 11,517 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக குஜராத்தில் 2859 பேருக்கும் மகாராஷ்ட்ராவில் 2770 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 15 முதல் 30 படுக்கைகளை கறுப்பு பூஞ்சை நோயாளிகளுக்காக ஒதுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கறுப்பு பூஞ்சை தொற்றை சரிசெய்ய ஆம்போடெரிசின் பி Amphotericin B ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இந்த மருந்துக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென பல மாநிலங்கள் வலியுறுத்துகின்றன.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement