dinamalar telegram
Advertisement

முதல்வர் காரை வழிமறித்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரி நாராயணன் பேட்மின்டன் பயிற்சியாளராக உள்ளார். இவர் பாரா பேட்மின்டனில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். பத்ரி நாராயணன் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பயிற்சியாளர் வேலைக்கு மனு அளித்து வருகிறார். உயர்நீதிமன்றம் இவருக்கு அரசு வேலையை தர வேண்டும் என பரிந்துரை செய்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கார் அருகே சென்று ''என் மனுவை பெற்றுக் கொள்ளுங்கள்'' என பத்ரிநாராயணன் குரல் எழுப்பினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முதல்வர் அவரை அழைத்து மனுவை பெற்றுக் கொண்டதோடு உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement