dinamalar telegram
Advertisement

முழு ஊரடங்கு பிசுபிசுக்கிறதா?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செல்லவும் மாவட்டத்துக்குள்ளே பயணம் செல்லவும் இபதிவு கட்டாயமென அரசு அறிவித்தது. அது நேற்று நடைமுறைக்கு வந்தது. சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் சிக்னலில் வாகனங்களின் இ பதிவை செக் செய்து போலீசார் அனுப்புகின்றனர். காலை 9 மணியளவில் வாகன ஓட்டிகளின் இ பதிவை போலீசார் பரிசோதித்தபோது எல்ஐசி பில்டிங் வரையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதில் ஆம்புலன்ஸ்களும் சிக்கியதால் பரபரப்பு உண்டானது. வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தனர். சமூக இடைவெளி காணாமல் போனது. பிரச்னை கையை மீறி விடும் என நினைத்த போலீசார், இ பதிவை செக் செய்யாமலே தடுப்புகளை திறந்து விட்டனர். இபதிவு செய்யாதவர்களும் போலீசிடமிருந்து எஸ்கேப் ஆயினர். அதிமுக ஆட்சிக் காலத்தில் இபாஸ் பெற்றுச் செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் இ பாஸ் பெறுவது கடும் சிரமமாக இருந்தது. ஊரடங்கு சமயத்தில் நடமாட்டம் குறைந்தது. இப்போது, இ பதிவு நடைமுறைகள் மிகவும் எளிதாக இருப்பதால் பலரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இபதிவு செய்து பயணிக்கின்றனர்; காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் கடைக்கு போவதாக சொல்லிவிட்டு வெளியே தேவையின்றி சுற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் ஊரடங்கு அமலில் உள்ளதா? என கேட்குமளவுக்கு சில சமயங்களில் சாலையில் வாகனங்கள் அதிகளவில் தென்படுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement